அடங்காத கல்லூரி மாணவர்கள்.. மாநகர பேருந்தில் கத்தியை தரையில் தேய்த்தபடி அட்டகாசம்.. அலறும் பயணிகள்..!

By vinoth kumar  |  First Published Oct 31, 2022, 3:13 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பேருந்து, ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 


சென்னையில் ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசியதை அடுத்து மாநகர பேருந்துகளில் கத்தியை தரையில் தேய்த்தபடி கெத்து காட்டிய கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பேருந்து, ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி போலீசார் கைது நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் குறையவில்லை. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் உயிரிழப்புக்கு நீங்க தான் காரணம்.. தமிழக அரசை அலறவிடும் ராமதாஸ்.!

undefined

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி தேய்த்த வீடியோ வைரலாகி 3 மாநில கல்லூரி கமாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாநகர பேருந்துகளில் கத்தியை தரையில் தேய்த்தபடி மாணவர்கள் ரகளையில் ஈடுபடும் வீடியோ வைரலாகியள்ளது.

செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் மாநகர பேருந்தில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பட்டாக்கத்தியை தரையில் உரசி நெருப்பை வரவழைத்து சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மாநகர பேருந்தின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  கல்லூரி மாணவர்கள் மற்றும் வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி.. ரயில் பயணிகளை அலற விட்ட மாணவர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

click me!