சென்னையில் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

By SG BalanFirst Published Jun 3, 2024, 11:29 AM IST
Highlights

இந்த சந்திப்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கோயம்புத்தூரில் மிகவும் பழமை வாய்ந்த கல்வி நிறுவனமான பி எஸ் ஜி கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமான பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்எம்ஏ அரங்கில் நடைபெற்றது.

Latest Videos

பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் மேலாண்மை அறங்காவலர் திரு எல். கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விமர்சையாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து  கொண்டனர். 

பிஎஸ்ஜி கல்விக் குடும்பத்தையும் முன்னாள் மாணவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.  பிஎஸ்ஜி கல்வி குழுமத்தின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது ஐந்து சதவீத இடங்கள் முன்னாள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்லூரி செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவைசிகிச்சை! டெல்லி கால்நடை மருத்துவமனை சாதனை!

இந்த நிகழ்வில் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர்.  கண்ணையன் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சென்னை பிரிவிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  சென்னை பிரிவின் தலைவராக திரு என்.  வெங்கடேஷ் மற்றும் செயலாளராக திரு சி.கே. குமரவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சீலா ராமச்சந்திரன், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஆர். நந்தகோபால் , டி ராஜ்குமார் மற்றும் கமிட்டி உறுப்பினர் ராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிஎஸ்ஜி கல்லூரியில் தான் பயின்ற போது நடைபெற்ற சுவாரஸ்யமான நடன நிகழ்ச்சி பற்றி நகைச்சுவையாக பேசினார். பெண் வேடமிட்டு கிளாமராக மேடையில் நடமாடிய காரணத்தினால் ஒரு வாரம் தன்னை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்கள் என்று நிழல்கள் ரவி  குறிப்பிட்டார். தன்னை சஸ்பெண்ட் செய்த  கல்லூரியின் முதல்வர் தனக்கு மீண்டும் வேறு ஒரு கல்லூரியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பரிந்துரையும் செய்தார் என அந்த பாடலையும் பாடி நகைச்சுவையாக அந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

கண்ணொளித் திட்டம் முதல் காப்பீட்டுத் திட்டம் வரை: கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த மருத்துவத் திட்டங்கள்!

click me!