ரெட் அலர்டை திருப்பிப் போட்ட வானிலை..!! தமிழகத்தில் வேகம் எடுக்காத மழை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2019, 7:56 AM IST
Highlights

நேற்றிரவு அதிக அளவில் மழை கொட்டி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசானது முதல் மிதமான மழையே பெய்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்தபடி நேற்றிரவு முதல் மழையின் தாக்கம் அந்தளவிற்கு இல்லை,  ஆனாலும் அறிவிக்கப்பட்ட ரெட் அலட் எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி . கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்ளுக்கு  வானிலை ஆய்வு மையம் ரெட் அலட்ர் எச்சரிக்கை விடுத்தது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. நேற்றிரவு அதிக அளவில் மழை கொட்டி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசானது முதல் மிதமான மழையே பெய்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக இந்த நான்கு  மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறியீட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது அது ரெட்அலர்ட் என்றும் இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அல்ல என்றும் நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே, அதாவது இருபத்தி ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் எதிர்பாத்தபடி மழை இல்லை. 

இந்நிலையில் ரெட் அலர்ட் என்றால் என்ன என்பது குறித்தும், அதனால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கீழ் பார்ப்போம் :- அதாவது ரெட்  அலர்ட் என்பது மிகவும் மோசமான வானிலை நிலவும் என்பதற்கான எச்சரிக்கை. எனவே அதில்  பொதுமக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல், மற்றும்  போக்குவரத்து பாதிப்பு, மின்வசதி, துண்டிப்பு ஏற்படக்கூடும் என்பதற்கான அறிவப்பு,  மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை,  கன மழையினால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படும்,  அரசு விடுக்கும் எச்சரிக்கைகளையும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்  மக்கள் பின்பற்ற வேண்டும். என்பதுடன்  மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற முக்கிய காரணிகளை உள்ளடக்கியதே ரெட் அலர்ட் எனப்படுவது குறிப்பிடதக்கது.
 

click me!