மக்களே... எச்சரிக்கையா இருங்க..!! அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..!!

Published : Oct 21, 2019, 07:37 AM IST
மக்களே... எச்சரிக்கையா இருங்க..!! அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..!!

சுருக்கம்

தமிழகத்தைப் பொருத்தவரை 20, 21, 22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த  இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுடன், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள  வானிலை ஆய்வு மைய இயக்ககம், குமரிக்கடல் ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து பகுதியிலும் மிதமிஞ்சிய மழை பெய்யக்கூடும்.  இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை 20, 21, 22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த  இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புவனகிரி நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பதிவாகி உள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தமிழக மீனவர்கள் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரளா கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?
ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. பார்த்து அரண்டு மிரண்டு போன போலீஸ்