பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல்.. கலவர பூமியான சமத்துவ பொங்கல் விழா..!

Published : Jan 13, 2023, 02:03 PM IST
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல்.. கலவர பூமியான சமத்துவ பொங்கல் விழா..!

சுருக்கம்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா கோலாகலாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டு சரமாரியாக கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் இரு தரப்பினருக்கு இடையே மோதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா கோலாகலாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டு சரமாரியாக கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து பயத்தில் சிதறி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலவரம் செய்த மாணவர்கள் போலீஸ் வருவதை கண்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருதரப்பையும் சேர்ந்த புருசோத்தமன், ஆனந்தன், பிரசாந்த் ஆகிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மாணவர்களை தேடி வருகின்றனர். நேற்று கலவரம் நடந்து மாணவர்கள் பயந்தில் ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!