மிகுந்த மகிழ்ச்சியான செய்தி...!! குழந்தை சுஜித் உயிருடன்தான் இருக்கிறான். ஆனால் மயக்க நிலையில் இருக்கிறான்..!! அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2019, 1:58 PM IST
Highlights

குழந்தையின் கையில் உள்ள வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் கையில் வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதால்.  குழந்தை உயிருடன் அதேநேரத்தில் மயக்க நிலையிலும் இருக்கலாம் என்றும்,  அதனால் மீட்புப் பணிகள் எந்த அளவிற்கு வேகமாக செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக செய்து வருவதுடன் குழந்தையை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என அவர் கூறினார். 
 

ஆழ்துளை கிணற்றில்  80 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் உடலில் வெப்ப நிலை இருப்பதால் சிறுவன் உயிருடனும் அதே நேரத்தில் மயக்க நிலையிலும்  இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கடந்த 43 மணிநேரமாக சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு  மீட்புப்  பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரின் அர்ப்பணிப்பு குறித்து சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துக்கள் பதிவாகிவருகிறது.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  சிறுவன் சுஜித்தை மீட்க சுமார்  70 பேர் கொண்ட குழு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் 100 அடி ஆழம் தோண்ட வேண்டிய நிலையில் 6.3 மீட்டர் ஆழம்,  தோண்டப்பட்டுள்ளது. 

அதாவது 20 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து குழியில் ஆக்சிஜன் செலுத்தி வருவதுடன் சிறு கேமரா மூலம் சுஜித்தை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும்  சிறுவனின் உடலில் எந்த அசைவும் தென்படவில்லை என்றவர், ரோபோ கேமராவை குழிக்குகள் அனுப்பி குழந்தையின் கையில் உள்ள வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் கையில் வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதால்.  குழந்தை உயிருடன் அதேநேரத்தில் மயக்க நிலையிலும் இருக்கலாம் என்றும்,  அதனால் மீட்புப் பணிகள் எந்த அளவிற்கு வேகமாக செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக செய்து வருவதுடன் குழந்தையை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என அவர் கூறினார். 

 இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தை குறித்தும்  மீட்பு நடவடிக்கைகள் குறித்தும்,  தொலைபேசியின் வாயிலாக தகவல் கேட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். விபத்து நடந்த சில மணி நேரங்களில்  மொத்த அரசு இயந்திரமும் அமைச்சர்களும் அங்கு முகாமிட்டு குழந்தை மீட்பில்  ஈடுபட்டு வருவது,பாராட்டைப் பெற்றுள்ளது.  
 

click me!