சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை பற்றியும் உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு நேப்பியர், வள்ளுவர் கோட்டம், எல்.ஐ.சி, மெரினா என பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரை சென்னை மாநகரம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை தலைமை இடமாக செயல்பட்டது தான் இதற்கு காரணம்.
சென்னையில் உள்ள மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை பற்றி தெரிந்த நமக்கு சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பற்றி தெரிவதில்லை. அப்படி சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை பற்றியும் உங்களுக்கு தெரியுமா?
undefined
சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் ராயப்பேட்டையில் தான் இந்த அரண்மனை இருக்கிறது. இங்கு தற்போது மன்னர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த அரண்மனை பற்றி பார்க்கலாம்.. ஆற்காடு நவாப் ஆட்சி செய்த பகுதிகளில் சென்னையின் சில பகுதிகளும் அடங்கும்.. சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் தான் ஆற்காடு நவாப்பின் அரண்மனை அமைந்திருந்தது. இங்கு தான் 1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப் வாழ்ந்தனர்.
1855-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வாரிசு இழப்பு கொள்கையின் படி ஆங்கிலேயர்கள் நவாப் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பின்னர் திருநெல்வேலி பிரதான சாலையில் ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில் ஆற்காடு நவாப் வாழ்ந்து வந்தனர். எனினும் ஆங்கிலேயர்களுடான நல்ல உடன்படிக்கையில் இருந்த ஆற்காடு நவாப்பிற்கு அந்த சிறிய இடம் சரியானது இல்லை என்று ஆங்கிலேயர்கள் கருதினர்.
எனவே ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை நவாப்பிற்கு அளித்தனர். 1798 வரை வரை இந்த மஹாலை அரசு அலுவலகமாக பயன்படுத்தி வந்த ஆங்கிலேயர்கள் 1876-ம் ஆண்டு இந்த மஹாலை நவாப் குடும்பத்தின் வசிப்பிடமாக் மாற்றினர். அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர்.
தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக முகமது அப்துல் அலி நவாப் இருக்கிறார். தனது குடும்பத்துடன் அவர் அமீர் மஹால் அரண்மனையில் வசித்து வருகிறார்.
14 ஏக்கர் நிலபரப்பில் இந்தோ சரசெனிக் பாணியில் இந்த அமீர் மஹால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள தர்பார் மண்டபத்தில் முன்னாள் நவாப்களின் பல அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நவாப்கள் பயன்படுத்திய கேடயங்கள், துப்பாக்கிகள், பல்லக்குகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசியாவின் டாப் 50 உணவகங்கள்.. சென்னையில் உள்ள இந்த பிரபல உணவகமும் லிஸ்ட்ல இருக்கு..
இந்த அரண்மனையில் சுமார் 80 அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில ரகசிய அறைகளும் இந்த அரண்மனையில் இருப்பதாகவும் அவற்றை விருந்தினர்கள் பார்வைக்கு மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அமீர் மஹாலின் உட்பகுதியில் சிறிய கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் இருப்பது மற்றொரு சிறப்பு.. ஆரம்பத்தில் 30 அரச உறுப்பினர்கள் மட்டுமே இந்த அரண்மனையில் வாழ்ந்தனர். ஆனால் தற்போது ஆற்காடு இளவரசரின் உறவினர்கள் ஊழியர்கள் உட்பட 600 பேர் வசிக்கின்றனர்.