வடசென்னையை வச்சு செய்யும் கொரோனா.. 2 மண்டலத்தில் செம காட்டு காட்டும் கொடூரம்.. மண்டல வாரியாக பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published May 7, 2020, 3:42 PM IST
Highlights

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம். 
 

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை எட்டிவருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 771 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 324 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு 2328ஆக அதிகரித்தது. 

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பன்மடங்கு பாதிப்பு அதிகமாகவுள்ளது. அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய பெருநகரம் என்பதால் சென்னையில் பாதிப்பு அதிகமாகவுள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் அடர்த்தி மிகுந்த வடசென்னை பகுதிகளில் தான் கொரோனா கோர தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது. 

கொரோனா தடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்காக சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், வடசென்னைக்குட்பட்ட திருவிக நகர் மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்கள் தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. திருவிக மண்டலத்தில் அதிகபட்சமாக 412 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 375 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 387 பேரும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 285 பேரும் அண்ணாநகர் மண்டலத்தில் 191 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தண்டையார்பேட்டை மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 2328 பேரில் 348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். 1952 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  

சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம்:

திருவிக நகர் - 412

ராயபுரம் - 375

கோடம்பாக்கம் - 387

அண்ணா நகர் - 191

தேனாம்பேட்டை - 285

தண்டையார்பேட்டை -  168

திருவொற்றியூர் - 40

மாதவரம் - 30

மணலி - 13

வளசரவாக்கம் - 176

ஆலந்தூர் - 14

அடையாறு - 91

பெருங்குடி - 20

சோழிங்கநல்லூர் - 15
 

click me!