சென்னையில் பயங்கரம்..! இடிந்து விழுந்த குடியிருப்பு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

Published : Dec 27, 2021, 12:03 PM ISTUpdated : Dec 27, 2021, 12:44 PM IST
சென்னையில் பயங்கரம்..! இடிந்து விழுந்த குடியிருப்பு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

சுருக்கம்

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 331 அடிக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு பகுதியில் 24 வீடுகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கட்டிடத்தில் காலை திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விரிசல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே சென்றது. இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவந்தனர். இதனால், வீட்டில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருந்தபோதிலும் அருகில் இருந்த மக்கள் ஆபத்தை உணராமல் அருகில் இருந்ததை பார்த்து கூச்சலிட்டு அவர்களையும் வெளியேற்றினர். 

சிறிது நேரத்தில் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது. ஆனால், எந்த உயிருழப்பும் இல்லாமல் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தின் அருகே வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது விசாரித்து வருகின்றனர். அனைத்து உடைகளை இழந்த பொதுமக்கள் நடுரோட்டில் கண்ணீருடன் இருந்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!