ஓவர் நைட்டில் பேமஸ்.. அன்னபூரணி ஆதிபராசக்தியின் அவதாரமா? கிண்டல் அடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

Published : Dec 27, 2021, 09:10 AM IST
ஓவர் நைட்டில் பேமஸ்.. அன்னபூரணி ஆதிபராசக்தியின் அவதாரமா? கிண்டல் அடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

சுருக்கம்

சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடையே மிக பிரபலம் அடைந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கடந்த 2014ம் ஆண்டில் பங்கேற்றவர் அன்னபூரணி.   அவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும். இன்னொரு பெண்ணின் கணவருடன் தான் நிரந்தரமாக வாழ வேண்டும்  இதற்கு ஒரு தீர்வு கோரி அந்த நிகழ்ச்சிக்கு அவராகவே காதலனுடன் வந்திருந்தார்.

அன்னபூரணி அரசு அம்மா என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடையே மிக பிரபலம் அடைந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கடந்த 2014ம் ஆண்டில் பங்கேற்றவர் அன்னபூரணி.   அவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும். இன்னொரு பெண்ணின் கணவருடன் தான் நிரந்தரமாக வாழ வேண்டும்  இதற்கு ஒரு தீர்வு கோரி அந்த நிகழ்ச்சிக்கு அவராகவே காதலனுடன் வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவரின் கணவர் எதிரே அமர்ந்திருந்தார்.  அன்னபூரணியின் காதலனின் மனைவி எதிரே கண்ணீருடன் அமர்ந்திருந்தார். அந்த  அன்னபூரணி இன்றைக்கு ஆன்மிக அவதாரம் எடுத்திருக்கிறார்.  அதுவும்  தன்னைத் தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்கிறார். அவரது காலில் விழுந்து மக்களும் ஆசி வாங்கிச் செல்கிறார்கள். அன்னபூரணியும் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அன்னபூரணியின் அருளாசிகள் ஒரு பக்கம் வைரலாகி வர, சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணியின் நிகழ்ச்சியும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்;- அந்தப் பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்குன்னு நினைக்கிறேன். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சாமியார்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. சில சாமியார்கள் பாலியல் புகார்களில் சிக்கி நீதிமன்றங்களில் அது குற்றம்தான் என்று நிரூபிக்கப்பட்ட நிகழ்வுகள் கூட இருக்கின்றது. தற்போது கூட சிறைச்சாலைகளில் ஏராளமான சாமியார்கள் கம்பி எண்ணி வரக்கூடிய சூழலில் புதிது புதிதாக தங்களை சாமியார் என்றும் தாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று குறிப்பிட்டு பல்வேறு தரப்பில் இருந்து கிளம்புவதும் அவர்களுக்கு மக்கள் இடத்தில் இருந்து பெரும் ஆதரவும் நம்முடைய சமூகம் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!