
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படுத்தப்படும் தின்னர் உற்பத்தி செய்து சேமித்து வைக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் வழக்கம் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பல்வேறு இடங்களில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமல்லாமல் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பின்னர் தீயானது அருகில் இருந்த தனியார் பள்ளி வளாகத்திற்கும் பரவியது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அலறியபடி பள்ளியில் உள்ள மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தனியார் பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த விஷயத்தை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் பதறியடித்து வந்து தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் குடியிருப்புகள் உள்ளதால் பலருக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.