அக்டோபர் 7 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை... நாள்தோறும் 300 முறை இயக்க திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 29, 2020, 6:26 PM IST
Highlights

 7 ஆம் தேதி முதல் தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சரக்கு ரயில்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் அனைத்து விதமான பொதுப் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில், 7 ஆம் தேதி முதல் தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!