தேர்தல் அறிவித்த முதல் நாளே அதிரடி.. சென்னையில் சிக்கிய ரூ.1.42 கோடி பணம்.!

By vinoth kumar  |  First Published Mar 17, 2024, 10:56 AM IST

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாளே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 20 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பிரதமரின் ரோட் ஷோ நடைபெறும் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிப்பு; பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

எனவே போலீசார் தங்கள் சோதனையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் சுமார் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் ஒன்றில் பெரியளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க:  அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?

அதனப்படையில் பூக்கடை உதவி ஆணையர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மொத்தம் ரூ. 1.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கே இருந்த 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை வைத்திருந்ததற்காக அந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணத்தை வைத்திருந்த யாசர் அரபாத் என்பதும், மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!