கே.எஸ்.அழகிரியின் ஆதரவளரான மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் நீக்கம்.. செல்வப்பெருந்தகை அதிரடி!

By vinoth kumar  |  First Published Mar 16, 2024, 9:29 AM IST

காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி- எஸ்டி பிரிவு தலைவராகவும், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்து வந்தவர் ரஞ்சன் குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். இவருக்கும் செல்வப் பெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சன் குமாரை அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே, அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட, சர்க்கிள், வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், பிரிவுகள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் குமார் திருவள்ளூர் மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!