சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, தி.நகர், போரூர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, தி.நகர், போரூர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி பகுதி
முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனி, செல்வ லட்சுமி கார்டன், உதயா நகர், வி.ஜி.என் லட்சமி நகர் நந்தம்பாக்கம் திருவள்ளுவர் நகர், பெல் நகர், காவியா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
undefined
தி.நகர் பகுதி
வள்ளுவர்கோட்டம் கதீட்ரல் கார்டன் ரோடு, ஜி.கே புரம், நியூ கிரி ரோடு, திருமூர்த்தி நகர், மகாலிங்கபுரம் முழுவதும், நுங்கம்பாக்கம் ஏரி பகுதி, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, குப்புசாமி தெரு, பெரியார் ரோடு, ராமகந்தபுரம், மாம்பலம் ரோடு, ஜி,என் செட்டி ரோடு பகுதி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி
திருமுடிவாக்கம் முருகன் கோயில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பல்லவாராயண் குளக்கரை தெரு, ஜகன்நாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி பகுதி
திருமுல்லைவாயல் கீரின் பீல்டு, வெங்கடாசலம் நகர், திருமுல்லைவாயல் காலனி, ஓரகடம் சொசைட்டி கோயில்பதகை சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி
அயப்பாக்கம் 1 முதல் 4000 டி.என்.எச்.பி அயப்பாக்கம்.
செங்குன்றம் பகுதி
சிட்கோ திருமுல்லைவாயல் எல்லம்மன்பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், எம்.ஜி.ஆர் நகர், ஈ.ஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.