தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்
undefined
அம்பத்தூர்:
திருவேற்காடு ஜமால் அடுக்குமாடி குடியிருப்பு, வேலப்பன்சாவடி, பி.எச்.ரோடு, மதிரவேடு, காவேரி நகர் மற்றும, அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
மணலி:
சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் இந்த சமயத்தில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க;- மழையால் தாமதமான திருமணம்… கோயிலில் தேங்கிய நீரில் நனைந்த தம்பதிகள்… நீரை அகற்ற வேண்டுகோள்!!