தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்:
மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாசிலாமணி நகர், சார்ல்ஸ் நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே நகர், அலெக்ஸ் நகர், முத்துகுமரன் கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
ஆழ்வார்திருநகர் :
திருவள்ளுவர் சாலை மெயின் ரோடு, வீரப்பன் நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, ஜானகி நகர், அண்ணா தெரு, இராஜாஜி அவென்யூ.
பெரம்பூர்:
பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம் காலனி முழுவதும், எஸ்.ஆர்.பி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை, பூம்புகார் நகர் முழுவதும், இராஜாஜி நகர், பார்த்திபன் தெரு, காமராஜ் தெரு, ஜானகி ராம் காலனி ஐ.சி.எப் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5வது பிளாக் பகுதி, சென்னை பாட்டையா ரோடு, தெற்கு மாட வீதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.