தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி :
ராஜ் பவன் காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதியார் நகர், நேரு நகர், TNHP காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், கண்ணகி நகர், அண்ணாசாலை பகுதி, நரசிங்கபுரம்.
undefined
ஐடி காரிடார் பகுதி:
சிறுசேரி காசா கிராண்ட், சுப்ரீம் ரெசிடென்ஸ், நத்தம் மெயின் ரோடு, சக்தி நகர், இந்திரா காந்தி தெரு, சோழிங்கநல்லூர், மாடர்ன் ஸ்கூல் செயின்ட், குமாரசாமி நகர்,
கே.கே.நகர் பகுதி:
சூளைமேடு, தசரதபுரம், கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம்
அம்பத்தூர் பகுதி:
திருவேகாடு, கேந்திரா விஹார், நூம்பல், PH சாலை, மேக்னா எஸ்டேட் அயம்பாக்கம், ICF காலனி அரும்பாக்கம், TNHB அத்திப்பட்டு , செல்லியம்மன் நகர்.
பெரம்பூர் பகுதி:
ICF வில்லிவாக்கம் சன்னதி தெரு, வில்லிவாக்கம் பெருமாள் கோவில் வடக்கு மாட தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.