உஷார் மக்களே.. சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

Published : Feb 04, 2023, 07:56 AM ISTUpdated : Feb 04, 2023, 07:57 AM IST
உஷார் மக்களே.. சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், பெருங்குடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம் பகுதி: 

கடப்பேரி ராதா நகர், நேரு நகர், சிட்லபாக்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, நாகல்கேணி, மெப்ஸ் எஸ்.எஸ்., லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

பெருங்குடி பகுதி: 

பாலவாக்கம் பெரியார் சாலை முழுவதும், பட்சியப்பர் தெரு, என்.எஸ்.கே.தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, மு.க.ஸ்டாலின் தெரு, ஆசை தம்பி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர் பகுதி: 

குன்றத்தூர் காவனூர், கலித்திப்பேட்டை, நந்தம்பாக்கம், தெற்கு மலையம்பாக்கம், அழகேசன் நகர், கன்னியப்பன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?