தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக? கூட்டணி பெயரும் மாற்றம்! மோடியின் படமும் நீக்கம்! இபிஎஸ் அதிரடி.!
அண்ணாநகர்:
ஆர்.வி.நகர், கஜபதி தெரு மற்றும் காலனி, லட்சுமி தியேட்டர் ரோடு, திரு.வி.கே. பூங்கா, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.
undefined
IT காரிடார் பகுதி:
எல்&டி சிறுச்சேரி, சபரி குடியிருப்புகள், வேல்ஸ் கல்லூரி சாலை, கரணி கிராமம், காஸ்மோ சிட்டி, புடிப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மற்றும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
காந்தி நகர், முத்தமிழ் நகர் 2வது பிளாக், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் தெரு, கருணாநிதி தெரு, சி.எஸ்.ஐ., பள்ளி சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இதே பொழப்பா போச்சு! செத்தவங்க திரும்பி வர மாட்டாங்க என்பதால் அடிச்சுவிடும் சீமான்! கொதிக்கும் செல்வப்பெருந்தகை