சென்னையில் 2 அடுக்கில் மிதக்கும் உணவக கப்பல்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா? அமைய போகும் இடம் இதுதான்.!

By vinoth kumar  |  First Published Mar 25, 2023, 12:19 PM IST

படகில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக, மூங்கிலால் வேயப்பட்ட இல்லமும், உணவகமும் இங்கு உள்ளன. குடிநீர் வசதி, கழிப்பறை வாகன நிறுத்துமிடமும் உள்ளன. வாரவிடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். 


தமிழகத்தில் முதல் முறையாக சென்னை முட்டுக்காடு படகு குழாமில், ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவக கப்பல் கட்டும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் இங்கு 15 அதிவேக படகுகளும், 27 வேக படகுகளும், 9 கால்மிதி படகுகளும், 2 உயர் வேக நீருக்கடி படகுகளும் உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

படகில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக, மூங்கிலால் வேயப்பட்ட இல்லமும், உணவகமும் இங்கு உள்ளன. குடிநீர் வசதி, கழிப்பறை வாகன நிறுத்துமிடமும் உள்ளன. வாரவிடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த படகு குழாமில், தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்ட உணவகத்துடன் கூடிய, 2 அடுக்கு மிதக்கும் கப்பல் அனைத்து வசதிகளுடன் செயல்பட உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தப் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். 

உணவக கப்பலில் உள்ள வசதிகள்

* உணவக கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

*  முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*  சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறையுடன் கப்பல் வடிவமைக்கப்பட உள்ளது.

*  கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும்.

click me!