மக்களே உஷார்... இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2021, 1:47 PM IST
Highlights

தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெயக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெயக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பசலனத்தின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள்  கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, உள் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலைக் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்  இன்றும் நாளையும் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், வடக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை மறுநாள் வரை  அரபிக்கடல் மற்றும் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

click me!