சென்னை மெரினா கடற்கரையில், வழக்கறிஞர்கள் சிலர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில், ஒரு காதல் ஜோடி கண்ட இடத்தில் கை வைத்து முகம் சுளிக்கும் அளவிற்கு அத்துமீறிய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய காதல் ஜோடியை தட்டி கேட்ட வழக்கறிஞர்கள் இருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெரினாவில் காதல் ஜோடி அத்துமீறல்
சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர், காதல் ஜோடிகள் அதிக அளவில் வருகை வழக்கம். சில சமயங்களில் பொதுமக்கள் இருந்தும் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில், வழக்கறிஞர்கள் சிலர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில், ஒரு காதல் ஜோடி கண்ட இடத்தில் கை வைத்து முகம் சுளிக்கும் அளவிற்கு அத்துமீறிய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை பார்த்த வழக்கறிஞர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!
வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு
இதையடுத்து ஆத்திரமடைந்த காதலர் தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர், வழக்கறிஞர்களை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.
போலீஸ் விசாரணை
இதில், பாடியை சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த பிரதீப் இருவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மண்டையில் 5 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.