சென்னையில் 2 கல்லூரி மாணவர்கள் மோதல்: புறநகர் ரயில் சேதம்!

By Manikanda Prabu  |  First Published Jul 6, 2023, 4:13 PM IST

சென்னையில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புறநகர் ரயில் சேதமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. நீ பெரியா ஆளா? நான் பெரிய ஆளா? உன் கல்லூரி பெருசா? என் கல்லூரி பெருசா? என கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் போக்கு அதிகளவில் நடைபெற்று வருகிறது. பேருந்துகளில் நடக்கும் ரூட் தல மோதல்களும் இதில் அடங்கும். இது தொடர்பாக எவ்வளவோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. மாணவர்களிடையேயான சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேதான் வருகிறது.

கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில் பெரும்பாலும் பொதுச்சொத்துக்கள் சேதமடைகின்றன. அப்பாவி பொதுமக்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், சென்னையில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புறநகர் ரயில் சேதமடைந்துள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசியதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு - பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வந்ததாகவும், அப்போது, பிரசிடென்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 பேர் கற்களை வீசியதாகவும்  கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த கல் வீச்சு காரணமாக ரயிலின் பல ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சண்டையில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துள்ளனர். ஆனால், போலீஸை கண்டதும் பயத்தில் மாணவர்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறித்து ஓடி விட்டனர். இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

click me!