சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான சேவை ஆரம்பம்!

By SG Balan  |  First Published Jul 5, 2023, 4:10 PM IST

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் பல விமான நிறுவனங்கள் தங்கள் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கியுள்ளன


சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் (NITB, T-2) இருந்து பல விமான நிறுவனங்கள் தங்கள் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கியுள்ளன. 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில், கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஸ்கைலைட் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி இந்த முனையைத்தைத் திறந்து வைத்தார்.

தற்போதுள்ள T-4 மற்றும் T-3 முனையங்களில் இயக்கப்பட்டு வந்த சர்வதேச விமானங்கள் புதிய முனையத்திற்கு மாற்றப்படுகின்றன. தற்போது, ​​13 விமான நிறுவனங்கள் தங்கள் சர்வதேச விமானங்களை புதிய முனையத்தில் இருந்த இயக்குகின்றன.

Tap to resize

Latest Videos

அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் கணக்கு தொடங்கலாம்! பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

undefined

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கல்ஃப் ஏர், எமிரேட்ஸ், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்கள் புதிய முனையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்கியுள்ளன. தாய் ஏர்வேஸ், மியான்மர் ஏர்வேஸ், யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா பெர்ஹாட் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து சர்வதேச சேவைகளைத் தொடங்கியுள்ளன. ஃப்ளை துபாய், தாய் ஏர் ஏசியா, ஜசீரா ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களின் விமான சேவை புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் விரைவில் வரவிருக்கும் புதிய விமான வழித்தடங்கள்:-

வரும் மாதங்களில் பல புதிய விமானங்கள் தங்கள் சர்வதேச விமான சேவைகளை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து தொடங்க உள்ளன. சென்னை விமான நிலையத்தை மற்ற சர்வதேச விமான நிலையங்களுடன் இணைக்கும் நான்கு விமானங்களை பாடிக் ஏர் தொடங்கவுள்ளது. சென்னை-மேடான், மேடான்-சென்னை, சென்னை-கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர்-சென்னை வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 200 நாள் பாத யாத்திரை செல்லும் அண்ணாமலை!

click me!