கோயம்பேட்டில் காய்கறி கடைகளுக்கு சீல்... களத்தில் இறங்கிய வணிகர் சங்கத்தினர்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2021, 7:14 PM IST
Highlights

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. 

தமிழகத்தில் நாளை முதல் கட்டுப்பாடுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் கூட செயல்படாது என்றும், நாளை முதல் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு மளிகை, காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே காய்கறிகள் விண்ணை முட்டும் விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஒரு கிலோ ரூபாய் 10க்கு விற்கப்பட்ட தக்காளி ரூபாய் 50 ஆகவும், உருளைக்கிழங்கு ரூபாய் 30- லிருந்து ரூபாய் 60 ஆகவும், பீன்ஸ் விலை 1 கிலோ - 290 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ- 190 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 1 கிலோ என்கிற அளவிற்கு 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. ஒரு நாளிலேயே இப்படி செயற்கையாக காய்கறி விலையை உயர்த்தப்பட்டது குறித்து புகார்கள் குவிய ஆரம்பித்தது. 

இதையடுத்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு வாகனங்கள் மூலமாக வீடு தேடி வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. 

சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை பன்மடங்கு உயர்த்தி விற்கப்படுவது குறித்து கேள்விப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்ற 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜாவும் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். சில கடைகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்கப்பட்டதை அடுத்து, அந்த கடை உரிமையாளர்கள் மீது வணிகர்கள் சங்கம் சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார். 

click me!