தலைநகரை தலைகீழாக போட்ட கொரோனா... கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி..!

By vinoth kumarFirst Published Apr 29, 2020, 12:59 PM IST
Highlights

சென்னை கோயம்பேட்டில் ஏற்கனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் ஏற்கனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டே வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 2,058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கெனவே கோயம்பேடு காய்கறி சந்தையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிக் கடை நடத்திவரும் 64 வயது மதிக்கத்தக்க நெற்குன்றத்தை சேர்ந்த ஒருவர், கோயம்பேடு காய்கறி சந்தையில் வேலை செய்துவரும் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அவர்கள் 4 பேருக்கும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவர் வசித்து வந்த பகுதி மற்றும் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்தறைஅதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!