சென்னையில் அதிர்ச்சி சம்பவம்... உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா..!

Published : Apr 29, 2020, 11:43 AM ISTUpdated : Apr 29, 2020, 06:14 PM IST
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்... உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா..!

சுருக்கம்

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்  உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளர்.

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்  உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளர்.

தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் போதிய ஒத்தழைப்பு வழங்காததால் சமூக பரவல் போல் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 121 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உணவு டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்துவர்களும் கண்டறியப்பட்டு வருகிறது. இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!