TASMAC Bar: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. அனைத்து டாஸ்மாக் பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published : Feb 04, 2022, 09:35 AM ISTUpdated : Feb 04, 2022, 09:38 AM IST
TASMAC Bar: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. அனைத்து டாஸ்மாக் பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சுருக்கம்

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒளிவுமறைவும் இல்லை என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், பார் உரிமையாளர்கள் டெண்டரில் முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி. பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!