தலைமை நீதிபதிக்கு கொரோனா... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Nov 07, 2020, 10:54 AM ISTUpdated : Nov 15, 2020, 05:15 PM IST
தலைமை நீதிபதிக்கு கொரோனா... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பணக்காரர், ஏழை, அரசியல்வாதி என  உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஆளுநர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு (61) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற செயல்பாடுகள் காணொளி காட்சி மூலமாக நடந்து வந்தது. அதன்பின் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது நேரடி விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி சாஹியும் நீதிமன்றத்துக்கு வந்து நேரடியாக வழக்குகளை விசாரித்து வந்தார்.  நேற்று முன்தினம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பான வழக்கை விசாரித்தனர்.

இந்நிலையில், சளி, உடல் வலி என கொரோனா அறிகுறிகளுடன் நேற்று மாலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை நீதிபதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரை தனிவார்டில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?