BREAKING எந்தெந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Nov 5, 2020, 3:24 PM IST
Highlights

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7  மணி முதல் 8 மணி வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் கூறுகையில்;- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7  மணி முதல் 8 மணி வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியை  கொண்டாட வேண்டும். அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் எனவும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ராஜஸ்தான், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளத. டெல்லி போன்ற மாநிலங்களில் காற்றின் மாசு அதிகரித்து வருவதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்துவரும் நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

click me!