தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையில் மழைநீரால் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது. தற்போது சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னையில் வேளச்சேரி, கிண்டி, வேப்பேரி, ஜிஎஸ்டி சாலை, கேகே நகர், போரூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
இதையும் படிங்க;- சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன?
undefined
இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. விமான ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கியதால் 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சர்வதேச பயணத்திற்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள் தாமதமாகின. சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல், கிண்டி கத்திப்பாரா சுரங்க பாதையில் முழுமையாக தண்ணீர் தேங்கியது. அதன் காரணமாக வடபழனி, அசோக்பில்லர், கோயம்பேடு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால், சுரங்க பாதையை கடக்க முயன்ற கார் சிக்கியது. பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க;- 1991க்கு பிறகு சென்னையில்.. 20 வருடத்தில் இல்லாத மழை.. புள்ளி விவரத்தோடு விளக்கம் தந்த தமிழ்நாடு வெதர்மேன்
இதனால், சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். பின்னர், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கத்திப்பாரா சுரங்கபாதையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கிண்டி கத்திப்பாரா சுரங்க பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து, கிண்டி கத்திப்பாரா சுரங்கபாதையில் நீர் வெளியேற்றப்பட்டதை அடுத்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையிலும் நீர் தேங்கவில்லை.