மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வீட்டியே முடங்கியுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உடனடியாக உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வீட்டியே முடங்கியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு உணவு, பால், பீரட் உள்ளிட்ட பொருட்களை தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு மேற்கொண்டு வருகிறது.
undefined
இன்னும் சில இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தண்ணீர் சூழ்ந்த நிலையில் உணவு இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வந்த உள்ளன. இந்நிலையில், பெருபாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மான் குமார் என்பவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு உணவு இல்லாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேராசிரியர் தீபக்நாதன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- திரு மான் குமார் (மாற்றுத்திறனாளி குடும்பம்) பெரும்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி சிரம்மபடுகிறார்கள். Pls help என்று டி.ஆர்.ராஜாவுக்கு டேக் செய்து அவர்களுக்கு உணவு தேவை என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்;- மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுங்கள் தோழர்களே! வெள்ள பாதிப்பில் எம் மாற்றுத்திறன் சகோதர்ர்களும் உள்ளனர்........அமைப்புகள் கொஞ்சம் எங்களையும் பாருங்கள் என்று வேதனையுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.