சென்னை BSNL அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...!

Published : Aug 01, 2019, 12:53 PM ISTUpdated : Aug 01, 2019, 01:06 PM IST
சென்னை BSNL அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...!

சுருக்கம்

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை மண்ணடியில் 5 மாடி கொண்ட பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முதல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ மளமளவென அடுத்த தளங்களுக்கும் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. 

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை ராயபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு உள்ளிட்ட 10 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் விரைந்து 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க;- திருமணமாகி 24 நாட்களில் துயரம்... கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறிய மனைவி... மனதை பதறவைத்த காட்சிகள்..!

அதிகாலை நேரம் என்பதால், பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரம், இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. முதல் தளத்தில் உள்ள சர்வர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு