சென்னை புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சிக்னல் கொடுத்தும் நிற்காமல் சென்ற புறநகர் மின்சார ரயில் ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நாள் தோறும் மாலை 5.35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்த ரயில் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு நின்று செல்லும். ஆனால், நேற்று புளியமங்கலத்தில் நிற்காமல் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரயில் ஓட்டுநரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிவப்பு நிற சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையிலும் எவ்வாறு ரயிலை இயக்குநீர்கள்? ரயிலின் கார்டும் சிக்னலை கவனிக்கவில்லையா? என தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.
வளையோசை கல கல வென - மேடையில் பாடல் பாடி அசத்திய எம்.எல்.ஏ செந்தில்குமார்
இந்நிலையில், கவனக்குறைவாக சிக்னலை பார்க்காமல் விரைவு மின்சார ரயில் என நினைத்து ரயிலை இயக்கியதாக விளக்கம் அளித்த ஓட்டுநர் ஜோஸ்வா பயணிகளிடம் மன்னிப்பு கோரினார். இதனைத் தொடர்ந்து ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் ஜோஸ்வா மற்றும் கார்டு தியாகராஜனிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெண்கள் உரிமை தொகை - அமைச்சர் தகவல்