ராயபுரத்தில் ரவுண்டு கட்டும் கொரோனா... பாதிப்பு 100 தாண்டியதால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Published : Apr 23, 2020, 06:45 PM IST
ராயபுரத்தில் ரவுண்டு கட்டும் கொரோனா... பாதிப்பு 100 தாண்டியதால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சுருக்கம்

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. 

சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 400 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  1,683 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு 400 ஆக அதிகரித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 117 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தண்டையார் பேட்டையில் 46 பேருக்கும், திரு.வி.க. நகரில் 45 பேருக்கும், தேனாம்பேட்டையில் 44 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களாக இருந்த அம்பத்தூர் மற்றும் மணலியிலும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று உருவாகியுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: 

திருவொற்றியூர் - 13, மணலி - 1, மாதவரம்- 3, தண்டையார்பேட்டை - 46, ராயபுரம் - 117, திருவிக நகர் - 45, அம்பத்தூர் -  1, அண்ணா நகர் - 32, தேனாம்பேட்டை - 44, கோடம்பாக்கம் - 36, வளசரவாக்கம் - 10, ஆலந்தூர் - 7, அடையார் - 7, பெருங்குடி -8, சோழிங்கநல்லூர் - 2 மற்றவர்கள் - 1 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!