சென்னை கார் ரேசர் உயிரிழப்பு.. விபத்துக்கு இதுதான் காரணமா? வெளியான சிசிடிவி காட்சிகள்..!

Published : Jan 09, 2023, 11:58 AM ISTUpdated : Jan 09, 2023, 02:10 PM IST
சென்னை கார் ரேசர் உயிரிழப்பு.. விபத்துக்கு இதுதான் காரணமா? வெளியான சிசிடிவி காட்சிகள்..!

சுருக்கம்

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (59). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர்  கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கார் ரேஸில் பங்கேற்ற வீரர் சக போட்டியாளரின் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ரேசரும், தனியார் ஓட்டல் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (59). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர்  கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  பல ஆண்டுகளாக தேசிய, சர்வதேச அளவிலான கார் ரேஸில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில், சென்னை அருகே இருங்காட்டு கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் ரேஸ் மைதானத்தில் தேசிய அளவிலான கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்  குமார் கலந்து கொண்டார். 

ரேஸ் வழித்தடத்தில்  கார்கள் சீறி பாய்ந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற காரை ஓவர் டேக் செய்த போது அந்த காரின் மீது  மோதும் சூழல் ஏற்பட்டதால், அவர் மீது மோதுவதை தவிர்க்க முற்கட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த குமார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!