PADMA SHRI மெர்சல் படத்தின் நிஜ ஹீரோ.. மறைந்த வடசென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு பத்மஸ்ரீ விருது..!

By vinoth kumarFirst Published Nov 10, 2021, 4:39 PM IST
Highlights

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பேட்ஜ் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டராக பணியாற்றிய அவர், மருத்துவத் தொழிலை சேவையாகவே கருதினார். 

வடசென்னையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து சமானானிய மக்களுக்கு தொண்டாற்றி மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பேட்ஜ் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டராக பணியாற்றிய அவர், மருத்துவத் தொழிலை சேவையாகவே கருதினார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அவர் பெட்ரோலியத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவையாற்றினார். பணி நேரம் தவிர்த்து, மீதமுள்ள நேரங்களில் வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக, குறைந்த கட்டணத்தில் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் சிகிச்சையளித்து வந்தார்.

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் டாக்டர் திருவேங்கடத்தைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். டாக்டர் ஃபீஸாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் அவரின் பெயரைவிட `5 ரூபாய் டாக்டர் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். சிகிச்சைக்கு வருபவர்களிடம் அன்பாகப் பழகக்கூடிய திருவேங்கடத்தின் சிரிப்பை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. 2017-ம் ஆண்டு `சிறந்த மனிதர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

எளிமையாகவே வாழ்ந்துவந்தார் `5 ரூபாய் டாக்டர்’ திருவேங்கடம். `வியாசர்பாடியில் ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டி சிகிச்சையளிக்க வேண்டும்’ என்பதே ஏழைகளின் டாக்டர் திருவேங்கடத்தில் நீண்டநாள் கனவு. ஆனால், அந்தக் கனவு நிறைவேறுவதற்குள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலமானாா். 47 ஆண்டுகள் இடைவிடா மருத்துவ சேவையாற்றினார். இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டாக்டா் திருவேங்கடத்தின் திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்தின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தித்தான் `மெர்சல் படத்தில் நடிகர் விஜய், 5 ரூபாய் டாக்டராக நடித்திருந்தார். 

இந்நிலையில், வடசென்னையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து சமானானிய மக்களுக்கு தொண்டாற்றி மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவனின் சார்பில் அவரது மனைவி சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார். 

click me!