போகிப் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

By vinoth kumarFirst Published Jan 14, 2023, 9:02 AM IST
Highlights

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும்.  இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாப்படுகிறது. 

தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால், கடும் புகை மூட்டத்தால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்பட்டி செல்கின்றனர். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும்.  இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாப்படுகிறது. இதனையொட்டி போகி பண்டிகையான இன்று அதிகாலை உற்சாகமாக மேளம் அடித்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்து பண்டிகை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- Bhogi pongal 2023: தீமைகள் விலக்கும் போகி பண்டிகை வரலாறு என்ன? இந்திரனை வணங்கும் பின்னணி இதோ!

இதனால், சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பல பொருட்களை எரிப்பதால் எழுந்த புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் புகை சூழ்ந்தது. மேலும் காற்றின் தரமும் மோசமாடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

காலை 6 மணி நிலவரப்படி ஆலந்தூர் 155, பெருங்குடி 113, கொடுங்கையூர் 94 , மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, ராயபுரம் 82 என உள்ளது. பிளாஸ்டிக், டயர்களை எரிப்பதை தவிக்குமாறு மாசுக்கட்டுப்பாடி வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புகை மூட்டம் காரணமாக சாலைகளில் செல்வோர் முகப்பு விளக்கை ஏறியவிட்டப்படி செல்கின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழு தகவல்கள்!

click me!