அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க முடியாது.. அண்ணா பல்கலைக்கழகத்தை எச்சரித்த AICTE.. அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்.!

By vinoth kumarFirst Published Sep 8, 2020, 10:18 AM IST
Highlights

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஆனால்,  அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இது  மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால்,  ஏஐசிடிஇ அமைப்பிடம் இதுவரை எந்த கடிதமும் வரவில்லை என  உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை  ஏற்க முடியாது என ஆகஸ்ட் 30-ம் தேதி ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியுள்ளது.  அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. மேலும், இந்த உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின்  அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏஐசிடிஇ தலைவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

click me!