சென்னையில் பஸ், ரயில் போக்குவரத்தை இயக்கினால் பெரும் உயிர் சேதம் ஏற்படும்... மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published May 30, 2020, 5:02 PM IST
Highlights

 சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலைமை அடைந்துவிட்டதாக சிலர் கருத்து கூறி வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் ஆறுதல் செய்தியை கூறியுள்ளனர். 

சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவினர் கூறுகையில்;- சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளோம்.  தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. 

சென்னையில் பேருந்து, ரயில் உள்ளிட்ட இயக்கக்கூடாது என முதல்வரிடம் மருத்துவ குழுவினர் எச்சரித்துள்ளதாக கூறியுள்ளனர். இரும்பல், சளி, காய்ச்சல் இருந்தால் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும். பயத்தை கிளப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து பேசிய மருத்துவ நிபுணர்கள் சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலைமை அடைந்துவிட்டதாக சிலர் கருத்து கூறி வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் ஆறுதல் செய்தியை கூறியுள்ளனர். 

click me!