சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில், மாநகரப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது 8 வயது மகனும், 6 வயதான தங்கை மகனும் வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில், மாநகரப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது 8 வயது மகனும், 6 வயதான தங்கை மகனும் வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த சிறுவர்கள் 2 பேரும் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினர். இதனை கண்ட பெற்றோர் அலறி துடித்துக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மூக்கில் டியூப் வைத்து தீவிர கிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குளிர்பான மாதிரிகளை சேகரித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதத்தில் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சதீஷ் -காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி(13) என்ற சிறுமி, தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.