சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேரந்தவர் அபிராமி (30). டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்தும், தலையணையால் அமுக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேரந்தவர் அபிராமி (30). டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்தும், தலையணையால் அமுக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது அபிராமியின் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில், அபிராமியின் தம்பி பிரசன்னா மணிகண்டன் (28) தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோருடன் மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர், பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த இருதரப்பு பெற்றோர், இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில், அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர். அந்த இளம்பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகெண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.