சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெல்ஜியம் ஐபி முகவரி கண்டுபிடிப்பு

By SG BalanFirst Published Feb 10, 2024, 3:00 PM IST
Highlights

கிடைத்துள்ள ஐபி முகவரி, சர்வர் போன்ற விவரங்களை வைத்து பெல்ஜியம் நாட்டைத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம் என்று காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையர் நடத்திய விசாரணையில் முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தனித்தனியே பள்ளி நிர்வாகத்தினரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில் பள்ளியில் வெண்குண்டு வைத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டது.

இதனால் சில பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து தங்கள் குழந்தைகளை உடனடியாக வந்து வீட்டுக்கு  அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அந்தப் பள்ளிகளின் முன்பு பெற்றோர் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.25% ஆக அதிகரிப்பு; 3 ஆண்டுகளில் அதிகபட்ச உயர்வு!

இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தி வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி பெற்றோருக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடர்ந்த போலீசார் அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளனர். மின்னஞ்சல் அனுப்பியவரின் சர்வர்கள் மற்றும் ஐபி முகவரி ஆகியவை பெல்ஜியத்தைச் சேர்ந்தவை எனத் தெரிந்துள்ளது எனக் கூறுகின்றனர்.

கிடைத்துள்ள ஐபி முகவரி, சர்வர் போன்ற விவரங்களை வைத்து பெல்ஜியம் நாட்டைத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம் என்று காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் மிரட்டல் விடுத்த நபர் பெல்ஜியத்தில் இருக்கிறாரா அல்லது வி.பி.என் (VPN) மூலம் பெல்ஜியம் ஐ.பி. முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை எக்கச்செக்கமாகக் குறைத்த சாம்சங்!

click me!