கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... கத்திப்பாரா மேம்பாலத்தில் தலைநசுங்கி உயிரிழந்த காவலர்..!

By vinoth kumarFirst Published Jul 11, 2019, 4:30 PM IST
Highlights

பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது லாரி மோதியதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது லாரி மோதியதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்தவர் நடராஜ்(56). இவர் பரங்கிமலை போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நந்தம்பாக்கத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், பங்கேற்றுவிட்டு காலை 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சானிடோரியத்தில் உள்ள வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

 

அப்போது, வாகனம் சென்னை கிண்டியை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அதே திசையில் சிமெண்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்தி சென்ற லாரி, இடதுபுறமாக பூந்தமல்லி வளைவில் திரும்பியது. அப்போது நேராக சென்ற நகராஜின் இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையிலிருந்த ஹெல்மேட் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்பக்கு காரணமாக அமைந்தது என லாரி ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யதுள்ளனர். 

click me!