Bharat Bandh: சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை.. பெரும் சிரமத்தில் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.!

Published : Mar 28, 2022, 08:18 AM ISTUpdated : Mar 28, 2022, 08:24 AM IST
Bharat Bandh: சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை.. பெரும் சிரமத்தில் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.!

சுருக்கம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

வேலைநிறுத்தத்தால் சென்னை உட்பட தமிழகம் முழவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ெபரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை

இந்நிலையில், இன்று தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பேருந்து போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் 90% பேருந்துகள் இயங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று திங்கள்கிழமை என்பதால், வேலைகளுக்கு செல்லும் மக்களும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்

வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இதனால், 2 நாட்களும் போக்குவரத்து, வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீ சாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!