அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் வங்கிகள் இனி 2 மணிநேரம் மட்டுமே செயல்படும்..!

By vinoth kumarFirst Published May 18, 2021, 12:31 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து முதல் வங்கிகள் செயல்படும் நேரம் 4 மணிநேரத்தில் இருந்து 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து முதல் வங்கிகள் செயல்படும் நேரம் 4 மணிநேரத்தில் இருந்து 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தலைநகர் சென்னையில் மட்டுமே பாதிப்பு குறைந்துள்ளது. மற்ற மாவட்டகள் மற்றும் கிராமங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ்  தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைகளுக்கு காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி  வழங்கவேண்டும். மேலும்,வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் மட்டுமே இயங்கவும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகளே மட்டுமே செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில், இனி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!