கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை..! உடல் வெந்து பரிதாப பலி..!

By Manikandan S R S  |  First Published Jan 18, 2020, 1:30 PM IST

சம்பவத்தன்று குழந்தை சிவானி ஸ்ரீயை குளிப்பாட்டுவதற்காக ஜனனி வெந்நீர் வைத்துள்ளார். பின் அதை வராண்டா அருகே வைத்து விட்டு வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சிவானிஸ்ரீ எதிர்பாராத விதமாக வெந்நீர் வாளியை பிடித்து இழுத்ததில் அதில் தவறி விழுந்தாள்.


சென்னை அருகே இருக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜனனி. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்களின் இளைய மகள் சிவானிஸ்ரீ. இரண்டு வயது குழந்தையான சிவானிஸ்ரீ, பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். மணிகண்டன் மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

பகலில் அவர் கடைக்கு சென்று விடவே, ஜனனி குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று குழந்தை சிவானி ஸ்ரீயை குளிப்பாட்டுவதற்காக ஜனனி வெந்நீர் வைத்துள்ளார். பின் அதை வராண்டா அருகே வைத்து விட்டு வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சிவானிஸ்ரீ எதிர்பாராத விதமாக வெந்நீர் வாளியை பிடித்து இழுத்ததில் அதில் தவறி விழுந்தாள்.

கொதிக்க, கொதிக்க நீர் இருந்ததால் உடல் வெந்து குழந்தை வலியில் கதறி துடித்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஜனனி செய்தவறியாது அலறினார். அக்கபக்கத்தினர் உதவியுடன் உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read: கோர தாண்டவமாடிய கடன்தொல்லை..! மிட்டாய் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை..!

click me!