அயோத்தி வழக்கு… - இன்று விசாரணை

By manimegalai aFirst Published Jul 11, 2019, 10:59 AM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி பிரச்சனைக்கான வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி பிரச்சனைக்கான வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், பல ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி கட்டப்பட்டு இருந்தது. அந்த இடம், ராமர் பிறந்த பகுதி எனவும், அந்த பகுதியில் இடத்தில், பாபர் மசூதியை கட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதைதொடர்ந்து, 1992ம் ஆண்டு, இந்து அமைப்பினரால், பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு,, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதன் இறுதி தீர்ப்பு, கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின்  ஒரு பகுதி ராமர் கோயில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும் மற்றொரு பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும் என 3 பாகங்களாக பிரிக்க வேண்டும்.

மீதமுள்ள பகுதி, இந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்கவேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான, கோபால் சிங் விஷாரத் என்பவர், உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.

click me!