வெயிலிலும், மழையிலும் மக்கி வீணா போகுது.. உடனே ஏலத்துக்கு விட்டு காசாக்குங்க.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

Published : Jun 12, 2021, 07:06 PM ISTUpdated : Jun 12, 2021, 07:08 PM IST
வெயிலிலும், மழையிலும் மக்கி வீணா போகுது.. உடனே ஏலத்துக்கு விட்டு காசாக்குங்க.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

சுருக்கம்

அமலாக்கத் துறைகளின் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பைசல் செய்திட வேண்டும். இதுகுறித்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் விரைந்து முடித்திட வேண்டும். கொளுத்தும் வெயிலிலும், கடும் மழையிலும் இந்த வாகனங்கள் மிகக் கடுமையாக சேதம் அடைகின்றன. 

அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடற்ற வாகனங்களுக்கு உரிய விலைகளை நிர்ணயித்து விரைவாக ஏலத்தை நடத்திட வேண்டும் என  தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் தூசு படிந்த நிலையில் பயன்பாடற்ற வகையில் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த வாகனங்கள் குறித்து விசாரிக்கும் போது, அவை ஏன் நிறுத்தப்பட்டிருக்கின்றன, யார் நிறுத்தியது போன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. 

இந்த வாகனங்களை அகற்றும் பணிக்கான நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும். இதன்மூலம், பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கும். மேலும், பழைய வாகனங்களை அகற்றுவதன் மூலம், அரசு கருவூலத்துக்கு சிறிது நிதியும் சேரும்.

அமலாக்கத் துறைகளின் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பைசல் செய்திட வேண்டும். இதுகுறித்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் விரைந்து முடித்திட வேண்டும். கொளுத்தும் வெயிலிலும், கடும் மழையிலும் இந்த வாகனங்கள் மிகக் கடுமையாக சேதம் அடைகின்றன. இதனால், ஏலம் எடுக்கும் போது உரிய விலைக்கு அவை போவதில்லை. இதனால், அரசுக்கு குறைந்த அளவிலேயே வருவாய் கிடைக்கிறது.

எனவே, பழைய பயன்பாடற்ற வாகனங்களுக்கு உரிய விலைகளை நிர்ணயித்து விரைவாக ஏலத்தை நடத்திட வேண்டும். இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்டு, அதற்குரிய அறிக்கையை பொதுத் துறை செயலாளருக்கு (மோட்டாா் வாகனங்கள்) அனுப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?
ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. பார்த்து அரண்டு மிரண்டு போன போலீஸ்